வியாழன், 10 அக்டோபர், 2024

காவல்காரர் வினா விடை


சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1). 'பெயரில்லாத' இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது...............
அ) பெயர் + இலாத. 
ஆ) பெயர் + இல்லாத.  
இ) பெயரில் + இல்லாத.  
ஈ) பெயரே + இல்லாத

2). வைக்கோல் மேலே துணியைச் சுற்றி வைத்திருக்கும் பொம்மை- இத்தொடரில் அடிக்கோடிட்ட
சொல்லின் எதிர்ச்சொல்.........
அ) கீழே 
ஆ) அருகில் 
இ) தொலைவில் 
ஈ) வளைவில் 

3). 'சோளக்கொல்லைப் பொம்மை' என்பது........
அ) உயிருள்ள பொருள் 
ஆ) உயிரற்ற பொருள் 
இ) இயற்கையானது 
ஈ) மனிதன் செய்ய இயலாதது

4) அசைய + இல்லை- இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது......
அ) அசைய இல்லை 
ஆ) அசைவில்லை 
இ) அசையவில்லை 
ஈ) அசையில்லை

5). நித்தம்- இச்சொல்லுக்குரிய பொருள்...
அ) நாளும் 
ஆ) இப்பொழுதும் 
இ) நேற்றும்
ஈ) எப்பொழுதும்

வினாக்களுக்கு விடையளிக்க

1). தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றது எது? 

சோளக்கொல்லைப் பொம்மை தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றது.

2). காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி யாது? 

காவல்காரர் இரவும் பகலும் தூங்கிடாமல் இங்குமங்கும் நகர்ந்திடாமல் பெருமையோடு காவல் காப்பார்.

3) பொம்மைக்குக் கருப்புக் கோட்டு, வெள்ளைச் சட்டை கொடுத்தது எது?

பொம்மைக்குக் கருப்புக் கோட்டு, வெள்ளைச் சட்டை கொடுத்தது காகம் ஆகும்.

4). காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் ஏன் அணியவில்லை?

காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் அணியவில்லை. ஏனெனில், அது ஒரு வைக்கோல் மேலே துணியை சுற்றி வைத்திருக்கும் சோளக்கொல்லைப் பொம்மை ஆகும். 

முதல் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களை எழுதுக. 

  1. ட்டை, ரிகை 
  2. ட்ட, டுவே 
  3. ரவும், ங்கு 
  4. பெருமை, பெயரில்லாத 
  5. காக்கை, காவல் 
  6. காற்று, னத்த 
  7. நேர்த்தி, நித்தம் 
  8. தனை, ந்த, வருக்கு 
  9. தவி, லவலாமே
  10. றுப்பு, ட்டி

மேகங்களுக்குப் பொருத்தமான மழைத்துளிகளை இணைக்க. 

  1. சரிகை- வேட்டி 
  2. கறுப்பு - கோட்டு 
  3. வெள்ளை -சட்டை
  4. சோளக்கொல்லை -பொம்மை
  5. கனத்த - மழை 


பாடலைத் தொடர்ந்து பாடுவோமா? 

மக்கள் ஒன்று கூடியே 
மகிழ விரும்பும் திருவிழா குழந்தைச் செல்வம் யாவுமே 
கூடி ஆடும் திருவிழா
பூத்துக்குலுங்கும் மலர்கள் போல் 
சிரித்து மகிழும் குழந்தைகள்! 
பாடித்திரியும் பறவைகள் போல் 
ஓடி ஆடும் குழந்தைகள் !
கள்ளமில்லா உள்ளமதில் 
பொங்கிவரும் மகிழ்ச்சி வெள்ளம் பார்!

உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக. 

நமக்குப் பயன்தரும் மரங்களுள் வாழையும் ஒன்று. வாழையின் பூ, காய், கனி, தண்டு ஆகியவற்றை நாம் சமைத்து உண்கிறோம். வாழைநாரைக் கொண்டு பூக்களைத் தொடுக்கிறோம். திருமண விழாக்களிலும் வீட்டில் நடைபெறும் விழாக்களிலும் வாழையிலையில் விருந்து படைக்கின்றனர். வாழையில் செவ்வாழை, பூவன் வாழை, மலைவாழை எனப் பல வகைகள் உள்ளன.

வினாக்கள் 

1). வாழையின் எப்பகுதிகள் உணவாகப் பயன்படுகின்றன?
வாழையின் பூ, காய், கனி, தண்டு ஆகிய பகுதிகள் உணவாகப் பயன்படுகின்றன.

2). வாழைநார் எதற்குப் பயன்படுகிறது? 
வாழைநார் பூத்தொடுக்கப் பயன்படுகிறது.

3). வாழையின் வகைகளுள் இரண்டை எழுதுக. 
செவ்வாழை 
பூவன் வாழை 
மலை வாழை

4). வாழையிலை- இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
வாழை + இலை

5).பலவகை -இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் எழுதுக.
பலவகை×சிலவகை 

செயல்திட்டம் 

உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலிருந்து கீழ்க்காணும் செய்திகளை திரட்டுக 
  1. தோட்டத்தின் பெயர் -தென்னந்தோப்பு
  2. உரிமையாளர் பெயர் - நடராஜன் ஆசிரியர்
  3. தோட்டம் அமைந்திருக்கும் ஊர்-கணபதி சுந்தர நாச்சியார்புரம்
  4. நீர் வசதி கிணறு/ அடிகுழாய் /ஆறு/ குளம் -கிணறு
  5. தோட்டத்தில் விளையும் காய்கறி/ பழம் பெயரைக் குறிப்பிடுக . தேங்காய்
  6. தோட்டம் பற்றிய உனது கருத்து நன்றாக உள்ளது/ ஓரளவு /வளர்ச்சி தேவை- நன்றாக உள்ளது
அறிந்து கொள்வோம் 
  1. தோட்டத்தில் பூச்சித் தாக்குதலைத் தடுக்க முட்டை ஓட்டுத் தூளுடன் சிறிது உப்பைக் கலந்து செடியைச் சுற்றிலும் வளையம் போட வேண்டும் 
  2. வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் தாவரங்களின் கனிம வளங்களைக் குறைக்கின்றன 
  3. மண் அரிப்பைத் தடுக்க மரங்கள் நட்டு வளர்த்தல் இன்றியமையாதது.

காவல்காரர்

சட்டை மேலே கோட்டு மாட்டி 

சரிகை போட்ட வேட்டி கட்டி 

நட்ட நடுவே தோட்டம் தன்னில் 

ராஜா போல நின்றி ருந்தார் 


இரவும் பகலும் தூங்கி டாமல் 

இங்கு மங்கும் நகர்ந்தி டாமல் 

பெருமை யோடு காவல் காப்பார் 

பெயரில் லாத காவல் காரர் 


காக்கை குருவி அங்கே வந்தால் 

காவல் காரர் நிற்கக் கண்டு 

சீக்கி ரத்தில்  வந்த வழியே 

திரும்பி ஓடும் பயந்து கொண்டு 


காற்று பலமாய் அடித்த

தாலே 

கனத்த மழையும் பெய்த தாலே 

நேர்த்தி யான அவரின் உடைகள் 

நித்தம் கிழிந்து வந்த தையோ 


இதனைக் கண்ட காகம் ஒன்று 

இந்தச் சமயம் இவருக்கு நாமும் 

உதவி செய்தால் பயமில் லாமல் 

உலவ லாமே என்று கருதி 


அருகி லுள்ள வீட்டிற் குள்ளே  

யாரும் இல்லா வேளை சென்று 

கறுப்புக் கோட்டு வெள்ளைச் சட்டை 

கட்டிக் கொள்ள சரிகை வேட்டி 


எடுத்து வந்து காவல் காரர் 

இருக்கும் இடத்தில் போட்டு விட்டே 

உடுத்திக் கொள்வீர் என்று சொல்லி 

ஒதுங்கி நின்று பார்த்த தங்கே 


காவல் காரர் பழைய உடையை 

கழற்றிக் கீழே போட வில்லை 

ஆவ லோடு புதிய உடையை 

அணிய வில்லை அசைய வில்லை 

உடனே காகம் அருகில் சென்றே 

உற்று நன்றாய் பார்த்த பின்னர் 

அடடே இந்தக் காவல் காரர் 

யாரோ என்று நினைத்தி ருந்தேன் 

வைக்கோல் மேலே துணியைச் சுற்றி 

வைத்தி ருக்கும் பொம்மை என்றே 

இக் கணத்தே நண்பர் அறிய 

எடுத்துச் சொல்வேன் என்று கூறி 


காவல் காக்கும் பொம்மை தலையில் 

காலை வைத்து நின்று கொண்டு 

கூவி அழைத்து   பறவை யாவும் 

கூடச் செய்து விட்ட தங்கே .

-அழ. வள்ளியப்பா